caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 101

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:101

وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنتُمْ تُتْلَىٰ عَلَيْكُمْ ءَايَٰتُ ٱللَّهِ وَفِيكُمْ رَسُولُهُۥ وَمَن يَعْتَصِم بِٱللَّهِ فَقَدْ هُدِىَ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்களோ உங்கள் மீது அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்பட, உங்களுடன் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பீர்கள்? எவர் அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்கிறாரோ (அவர்) திட்டமாக நேரான ஒரு பாதையின் பக்கம் நேர்வழி காட்டப்படுவார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்களோ உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதி காண்பிக்கப்பட, உங்களுடன் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பீர்கள்? எவர் அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்கிறாரோ (அவர்) திட்டமாக நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டப்படுவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi101. நீங்கள் எப்படி (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிட முடியும்? உங்கள் மத்தியில் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். அவனுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டுவிட்டார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70