وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ - அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை நாம் நீக்கி விடுவோம்; அவர்கள் (இணைவைப்பின் போது) செய்து கொண்டிருந்ததை விட மிகச் சிறந்ததை நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ - அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை நிச்சயமாக நாம் நீக்கி விடுவோம். இன்னும், அவர்கள் (இணைவைப்பில்) செய்து கொண்டிருந்ததை விட (ஈமான் கொண்டதற்கு பின்னர் அவர்கள் செய்த) மிகச் சிறந்த நன்மைகளுக்கு நாம் அவர்களுக்கு நற்கூலி தருவோம். (இன்னும் இணைவைப்பில் அவர்கள் செய்த பாவங்களையும் மன்னித்துவிடுவோம்.)
Tamil Translation - Abdulhamid Baqawi7. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.