يَوْمَ يَغْشَىٰهُمُ ٱلْعَذَابُ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு மேலிருந்தும் அவர்களின் கால்களுக்கு கீழே இருந்தும் தண்டனை அவர்களை மூடிக்கொள்கின்ற நாளில் (நரகம் அவர்களை சூழ்ந்து இருக்கும்). நீங்கள் செய்து கொண்டிருந்ததை நீங்கள் சுவையுங்கள் என்று (இறைவன்) கூறுவான்.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு மேலிருந்தும் அவர்களின் கால்களுக்கு கீழே இருந்தும் (வகை வகையான) தண்டனை அவர்களை மூடிக்கொள்கின்ற நாளில் (அந்த நரகம் அவர்களை சூழ்ந்து இருக்கும்). இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்ததை (-அதன் தண்டனையை) சுவையுங்கள் என்று (இறைவன்) கூறுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' என்று (இறைவன்) கூறுவான்.