فَكُلًّا أَخَذْنَا بِذَنۢبِهِۦ فَمِنْهُم مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُم مَّنْ أَخَذَتْهُ ٱلصَّيْحَةُ وَمِنْهُم مَّنْ خَسَفْنَا بِهِ ٱلْأَرْضَ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا وَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவர்களில்) ஒவ்வொருவரையும் அவர்களின் பாவத்தினால் நாம் தண்டித்தோம். இவர்களில் எவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோமோ அவர்களும் உள்ளனர். இன்னும், இவர்களில் இடி முழக்கம் பிடித்தவர்களும் உள்ளனர். இன்னும், இவர்களில் நாம் பூமியில் சொருகியவர்களும் உள்ளனர். இன்னும், இவர்களில் நாம் மூழ்கடித்தவர்களும் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifஆக, (இவர்களில்) ஒவ்வொருவரையும் அவர்களின் பாவத்தினால் நாம் தண்டித்தோம். எவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், யாரை இடி முழக்கம் பிடித்ததோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், நாம் யாரை பூமியில் சொருகினோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், யாரை நாம் மூழ்கடித்தோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. எனினும், அவர்கள் தங்களுக்கு தாமே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் சொருகி விட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், இவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.