وَعَادًا وَثَمُودَا۟ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَٰكِنِهِمْ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُوا۟ مُسْتَبْصِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் ஆதை, ஸமூதை நினைவு கூருங்கள்! அவர்களின் தங்குமிடங்களில் இருந்து உங்களுக்கு (அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது) தெளிவாக இருக்கின்றது. ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் செயல்களை அலங்கரித்தான். அவர்களை (நேரான) பாதையிலிருந்து தடுத்தான். அவர்கள் (தங்கள் வழிகேட்டில்) தெளிவானவர்களாக (-தற்பெருமையுடையவர்களாக) இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஆதையும் சமூதையும் நினைவு கூருங்கள்! அவர்களின் தங்குமிடங்களில் இருந்து (அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது) உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஷைத்தான், அவர்களுக்கு அவர்களின் செயல்களை அலங்கரித்தான். ஆக, அவன் அவர்களை (நேரான) பாதையிலிருந்து தடுத்தான். (நேர்வழி எது வழிகேடு எது என்பதில்) அவர்கள் தெளிவானவர்களாக இருந்தனர். (சத்தியத்தை அறிந்த பின்னர் அதை நிராகரித்தனர். வழிகேட்டைத் தெளிவாக அறிந்தும் அதில்தான் சென்றனர்.)
Tamil Translation - Abdulhamid Baqawi38. மேலும், இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போகவர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயல்களை ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர்களாகத்தான் இருந்தார்கள். (ஆனால் ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்.)