caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ankaboot அத்தியாயம், வசனம் 29

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 85 · 29:29

أَئِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ وَتَقْطَعُونَ ٱلسَّبِيلَ وَتَأْتُونَ فِى نَادِيكُمُ ٱلْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِۦٓ إِلَّآ أَن قَالُوا۟ ٱئْتِنَا بِعَذَابِ ٱللَّهِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் ஆண்களிடம் (உடல்) உறவு கொள்கிறீர்களா? பாதைகளை தடுக்கிறீர்கள்; உங்கள் சபைகளில் கெட்டசெயலை செய்கிறீர்கள். அவருடைய மக்களின் பதில் இருக்கவில்லை நீர் உண்மையாளர்களில் இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடம் கொண்டு வருவீராக என்று கூறியதை தவிர (அவர்கள் வேறு பதில் சொல்லவில்லை).
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக நீங்கள் ஆண்களிடம் உடலுறவு கொள்கிறீர்களா? பாதைகளை (மக்கள் பயன்படுத்த முடியாமல்) தடுக்கிறீர்கள். உங்கள் சபைகளில் கெட்ட செயலை செய்கிறீர்கள்.” ஆக, அவருடைய மக்களின் பதில் இருக்கவில்லை, “நீர் உண்மையாளர்களில் இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடம் கொண்டு வருவீராக” என்று அவர்கள் கூறியதைத் தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi29. (பெண்களை விட்டு விட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கிறீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கிறீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்கிறீர்களே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் பதில் கூறவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70