وَمَآ أُوتِيتُم مِّن شَىْءٍ فَمَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَزِينَتُهَا وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰٓ أَفَلَا تَعْقِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் (உலக) பொருளில் எது கொடுக்கப்பட்டீர்களோ அது உலக வாழ்க்கையின் இன்பமும் அதன் அலங்காரமும் ஆகும். அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிறந்ததும் நிலையானதும் ஆகும். நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
Tamil Translation - Omar Sharifநீங்கள் (உலக) பொருளில் எது கொடுக்கப்பட்டீர்களோ அது இவ்வுலக வாழ்க்கையின் இன்பமும் அதன் அலங்காரமும் ஆகும். (மறுமையில்) அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிறந்ததும் நிலையானதும் ஆகும். (அதை) நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi60. (நபியே! கூறுவீராக:) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ் விடத்தில் இருப்பவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?