وَقَالَ فِرْعَوْنُ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرِى فَأَوْقِدْ لِى يَٰهَٰمَٰنُ عَلَى ٱلطِّينِ فَٱجْعَل لِّى صَرْحًا لَّعَلِّىٓ أَطَّلِعُ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ مِنَ ٱلْكَٰذِبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஃபிர்அவ்ன் கூறினான்: “பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுள் உங்களுக்கு இருப்பதை நான் அறியமாட்டேன். ஆகவே, ஹாமானே! குழைத்த களிமண்ணை நெருப்பூட்டி செங்கல்லாக செய். முகடுள்ள ஒரு உயரமான கோபுரத்தை எனக்காக உருவாக்கு. நான் மூஸாவின் கடவுளை (வானத்தில்) தேடிப்பார்க்க வேண்டும். இன்னும், நான் அவரை பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.” (அவ்வாறு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு, அதில் ஏறி, வானத்தை நோக்கி அவன் அம்பெறிய, அது இரத்தக் கரையுடன் திரும்பி வந்தவுடன், நான் மூஸாவின் இறைவனை கொன்றுவிட்டேன் என்றான்.)
Tamil Translation - Omar Sharifஃபிர்அவ்ன் கூறினான்: “முக்கிய பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுளை உங்களுக்கு நான் அறியமாட்டேன். ஆக, ஹாமானே! குழைத்த களிமண்ணை நெருப்பூட்டி செங்கல்லாக செய். ஆக, முகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தை எனக்காக உருவாக்கு. நான் மூஸாவின் கடவுளை (வானத்தில்) தேடிப்பார்க்க வேண்டும். இன்னும், நான் அவரை பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi38. அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) ‘‘ தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு கடவுள் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச்செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய கடவுளை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு கடவுள் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ்விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான்.