caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 49

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:49

قَالُوا۟ تَقَاسَمُوا۟ بِٱللَّهِ لَنُبَيِّتَنَّهُۥ وَأَهْلَهُۥ ثُمَّ لَنَقُولَنَّ لِوَلِيِّهِۦ مَا شَهِدْنَا مَهْلِكَ أَهْلِهِۦ وَإِنَّا لَصَٰدِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினர்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் ஆஜராகவில்லை, நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்’ என்று கூறுவோம்.”
Tamil Translation - Omar Sharifஅவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்ப(மு)ம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் பிரசன்னமாகி இருக்கவில்லை, நிச்சயமாக நாங்கள் (இது விஷயத்தில்) உண்மையாளர்கள்’ என்று கூறுவோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi49. அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் இரவோடு இரவாக நாம் அழித்து விடுவோம். (இதை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், ‘‘ அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்'' என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக் கொண்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70