قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (-ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை எங்களில் குழந்தையாக வளர்க்கவில்லையா? எங்களுடன் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா!)
Tamil Translation - Omar Sharif(ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை (நீ) குழந்தையாக (இருந்தபோது) எங்களிடம் வளர்க்கவில்லையா? இன்னும், எங்களுக்கு மத்தியில் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா)!”
Tamil Translation - Abdulhamid Baqawi18. (அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்.