caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 75

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:75

أُو۟لَٰٓئِكَ يُجْزَوْنَ ٱلْغُرْفَةَ بِمَا صَبَرُوا۟ وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَٰمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் பொறுமையாக இருந்ததால் அறையை (சொர்க்கத்தின் உயர்ந்த தகுதியை) கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும் அதில் அவர்கள் முகமனைக்கொண்டும் இன்னும் ஸலாமைக் கொண்டும் சந்திக்கப்படுவார்கள். (வானவர்கள் சொர்க்கவாசிகளை சந்திக்க வரும்போது ஸலாம் கூறி அல்லாஹ்வுடன் வாழ்த்துக்களை சொல்வார்கள்).
Tamil Translation - Omar Sharifஅவர்கள் பொறுமையாக இருந்ததால் அறை(கள் நிறைந்த உயரமான மாளிகை)களை கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும், அதில் அவர்களுக்கு முகமன் கூறப்பட்டும் ஸலாம் கூறப்பட்டும் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. ஆகிய இத்தகையவர்களுக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவற்றைச் செய்யும்போது ஏற்பட்ட) சிரமங்களைச் சகித்துக் கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். ‘‘ஸலாம் (உண்டாவதாக)'' என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70