caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 45

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:45

أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوْ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا ٱلشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) நீர் பார்க்கவில்லையா? உமது இறைவன் எப்படி நிழலை (அதிகாலையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை) நீட்டுகிறான். அவன் நாடியிருந்தால் அதை (நிழலை) நிரந்தரமாக ஆக்கியிருப்பான். பிறகு அதன் மீது சூரியனை நாம் ஆதாரமாக ஆக்கினோம். (சூரியன் உதிக்கும் போது இரவின் அந்த நிழல் மறைந்து விடுகிறது. இதன் மூலம் நிழலும் அல்லாஹ்வின் ஒரு படைப்புதான் என்று அறியமுடிகிறது.)
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் பார்க்கவில்லையா, உமது இறைவன் எப்படி நிழலை (அதிகாலையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை) நீட்டுகிறான்? அவன் நாடியிருந்தால் அதை (-நிழலை) நிரந்தரமாக (ஒரே இடத்தில் இருக்கும்படி) ஆக்கியிருப்பான். பிறகு, அதற்கு சூரியனை நாம் ஆதாரமாக ஆக்கினோம். (சூரியன் நகர்வதற்கு ஏற்ப அந்த நிழலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்.)
Tamil Translation - Abdulhamid Baqawi45. (நபியே!) உமது இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால், அதை ஒரே நிலையில் வைத்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு வழிகாட்டியாக நாம்தான் ஆக்கினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70