caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:44

أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ إِنْ هُمْ إِلَّا كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் அதிகமானவர்கள் செவிமடுப்பார்கள் அல்லது சிந்தித்துப் புரிவார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் இல்லை கால்நடைகளைப் போன்றே தவிர. மாறாக, அவர்கள் (அவற்றைவிட) பாதையால் வழி கெட்டவர்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் செவிமடுப்பார்கள்; அல்லது, சிந்தித்துப் புரிவார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றே தவிர இல்லை. மாறாக, அவர்கள் (அவற்றைவிட) பாதையால் மிகவும் வழி கெட்டவர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. அவர்களில் பெரும்பாலானவர்கள் (உமது வார்த்தைகளைக் காதால்) கேட்கிறார்கள் என்றோ அல்லது அதை(த் தங்கள் மனதால்) உணர்ந்து பார்க்கிறார்கள் என்றோ நீங்கள் எண்ணிக் கொண்டீரா? அன்று! அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே தவிர, வேறில்லை. மாறாக, (மிருகங்களை விட) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70