وَإِذَآ أُلْقُوا۟ مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُّقَرَّنِينَ دَعَوْا۟ هُنَالِكَ ثُبُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அதில் நெருக்கமான இடத்தில் (சங்கிலிகளால் கைகள் கழுத்துகளுடன்) கட்டப்பட்டவர்களாக போடப்பட்டால் அங்கு (எங்கள்) கைசேதமே என்று (தங்களின் அழிவையும் நாசத்தையும்) அழைப்பார்கள். (உலகிற்கு திரும்ப செல்ல வேண்டுமே என்று கதறுவார்கள். தாங்கள் அழிந்து விடவேண்டுமே என்று சப்தமிடுவார்கள்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் அதில் நெருக்கடியான இடத்தில் (சங்கிலிகளால் கைகள் கழுத்துகளுடன்) கட்டப்பட்டவர்களாக போடப்பட்டால் அங்கு, “(எங்கள்) கைசேதமே!” என்று (தங்களின் அழிவையும் நாசத்தையும் கூவி) அழைப்பார்கள். (உலகிற்கு திரும்ப செல்ல வேண்டுமே! அல்லது, தாங்கள் அழிந்து விடவேண்டுமே என்று சத்தமிடுவார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi13. அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (துன்பத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள்.