caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 8

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:8

وَيَدْرَؤُا۟ عَنْهَا ٱلْعَذَابَ أَن تَشْهَدَ أَرْبَعَ شَهَٰدَٰتٍۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلْكَٰذِبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர் (-கணவர்) பொய் கூறுபவர்களில் உள்ளவர் என்று நான்கு முறை அவள் சாட்சி சொல்வது அவளை விட்டும் தண்டனையை தடுக்கும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக (எனது கணவராகிய) அவர் பொய் கூறுபவர்களில் உள்ளவர் என்று நான்கு முறை அவள் சாட்சி சொல்வது அவளை விட்டும் (விபச்சாரத்தின்) தண்டனையை தடுக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (அவனுடைய மனைவி குற்றமற்றவளாக இருக்க அவள் மீது குற்றம் திரும்பினால்) அவள் தன் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனையைத் தட்டிக் கழிப்பதற்காக (அவள் அதை மறுத்து) நிச்சயமாக(த் தனது) அ(க்கண)வன் பொய்யே கூறுகிறான் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70