وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِنْ أَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ قُل لَّا تُقْسِمُوا۟ طَاعَةٌ مَّعْرُوفَةٌ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் மீது கடுமையாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் (போருக்கு) புறப்பட்டு வருவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. (நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீர் (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ''(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.''