caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 32

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:32

وَأَنكِحُوا۟ ٱلْأَيَٰمَىٰ مِنكُمْ وَٱلصَّٰلِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَآئِكُمْ إِن يَكُونُوا۟ فُقَرَآءَ يُغْنِهِمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் ஜோடி இல்லாதவர்களுக்கும் (-மனைவி இல்லாத ஆண்களுக்கும், கணவன் இல்லாத பெண்களுக்கும்) உங்கள் ஆண் அடிமைகளிலும் உங்கள் பெண் அடிமைகளிலும் உள்ள நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களை தனது அருளால் நிறைவுறச் செய்வான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களில் துணை இல்லாதவர்களுக்கும் (-மனைவி இல்லாத ஆண்களுக்கும், கணவன் இல்லாத பெண்களுக்கும்) உங்கள் ஆண் அடிமைகளிலும் உங்கள் பெண் அடிமைகளிலும் உள்ள (ஒழுக்கமான) நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களை தனது அருளால் (அவர்களுக்கு செல்வத்தை கொடுத்து) நிறைவுறச் செய்வான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன் அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவன், (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70