وَلَوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبْحَٰنَكَ هَٰذَا بُهْتَٰنٌ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதை நீங்கள் கேட்டபோது “இதை நாங்கள் பேசுவது எங்களுக்குத் தகாது, அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன், இது பெரிய அபாண்டமான பேச்சு” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா!
Tamil Translation - Omar Sharifஇன்னும், அதை நீங்கள் கேள்வியுற்றபோது, “இதை நாங்கள் பேசுவது எங்களுக்கு ஆகுமானதல்ல, அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன், இது பெரிய அபாண்டமான பேச்சாகும்” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா!
Tamil Translation - Abdulhamid Baqawi16. நீங்கள் இதைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இதை நாம் (நம் வாயால்) பேசுவதும் நமக்குத் தகுதியில்லை. இது மாபெரும் அவதூறே என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?