إِذْ تَلَقَّوْنَهُۥ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُم مَّا لَيْسَ لَكُم بِهِۦ عِلْمٌ وَتَحْسَبُونَهُۥ هَيِّنًا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஏனெனில், நீங்கள் உங்கள் நாவுகளால் அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள். இன்னும் உங்கள் வாய்களால் உங்களுக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை கூறுகிறீர்கள், அதை மிக இலகுவாக கருதுகிறீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஏனெனில், நீங்கள் உங்கள் நாவுகளால் அதை உங்களுக்குள் (ஒருவர் மற்றவருக்கு) அறிவித்துக் கொண்டீர்கள். இன்னும், உங்களுக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை உங்கள் வாய்களால் கூறுகிறீர்கள். இன்னும், அதை மிக இலகுவாக (-சாதாரணமாக) கருதுகிறீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi15. (ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை, நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதை நீங்கள் இலேசாகவும் மதித்து விட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க பெரியது.