قُلْ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! யாருடைய கரத்தில் எல்லாவற்றின் பேராட்சி (பொக்கிஷம்) இருக்கிறது? அவன்தான் பாதுகாப்பு அளிக்கின்றான். அவனுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கப்படாது, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்... (இதற்கு பதில் கூறுங்கள்.)
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: யாருடைய கரத்தில் (பிரபஞ்சம்) எல்லாவற்றின் பேராட்சி இருக்கிறது? இன்னும், அவன் பாதுகாப்பு அளிக்கிறான். அவனுக்கு எதிராக (யாரும் யாருக்கும்) பாதுகாப்பு அளிக்க முடியாது, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் கூறுங்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi88. ‘‘ எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக் கூறுங்கள்)'' எனக் கேட்பீராக.