أَمْ تَسْـَٔلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது அவர்களிடம் (இந்த சத்தியத்தை போதித்ததற்காக) நீர் கூலி எதையும் கேட்கிறீரா? (அதனால் அவர்கள் இந்த சத்தியத்தை விட்டு விலகி செல்கின்றனரா?) உமது இறைவனின் கூலிதான் மிகச் சிறந்தது. அவன் கொடை வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன்.
Tamil Translation - Omar Sharif(இந்த சத்தியத்தை அவர்களுக்கு நீர் போதித்ததற்காக) அவர்களிடம் நீர் கூலி கேட்கிறீரா? (அதனால் அவர்கள் இந்த சத்தியத்தை விட்டு விலகி செல்கிறார்களா?) ஆக, உமது இறைவனின் கூலிதான் மிகச் சிறந்தது. இன்னும், அவன் கொடை வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi72. அல்லது, நீர் அவர்களிடம் ஒரு கூலியை கேட்கிறீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உமது இறைவன் (உமக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாகும். அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன் ஆவான்.