وَلَوِ ٱتَّبَعَ ٱلْحَقُّ أَهْوَآءَهُمْ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ بَلْ أَتَيْنَٰهُم بِذِكْرِهِمْ فَهُمْ عَن ذِكْرِهِم مُّعْرِضُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉண்மையாளன் (-அல்லாஹ்) அவர்களது விருப்பங்களை பின்பற்றினால் (-அதற்கு ஏற்ப அவன் நடந்து கொண்டால்) வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளவர்களும் நாசமடைந்து இருப்பார்கள். மாறாக, அவர்களுக்கு உரிய விளக்கத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் தங்களுக்கு கூறப்பட்ட விளக்கத்தை புறக்கணிக்கக்கூடியவர்கள் ஆவர்.
Tamil Translation - Omar Sharifஉண்மையாளன் (-அல்லாஹ்) அவர்களது விருப்பங்களை பின்பற்றி (காரியங்களை நடத்தி)னால் வானங்களும், பூமியும் இன்னும், அவற்றில் உள்ளவர்களும் நாசமடைந்து இருப்பார்கள். மாறாக, அவர்களுக்கு உரிய விளக்கத்தை நாம் அவர்களுக்கு விவரித்துவிட்டோம். ஆனால், அவர்கள் தங்களுக்கு கூறப்பட்ட விளக்கத்தை புறக்கணிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi71. சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்.