caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:44

ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَا كُلَّ مَا جَآءَ أُمَّةً رَّسُولُهَا كَذَّبُوهُ فَأَتْبَعْنَا بَعْضَهُم بَعْضًا وَجَعَلْنَٰهُمْ أَحَادِيثَ فَبُعْدًا لِّقَوْمٍ لَّا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு நாம் நமது தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒரு சமுதாயத்திற்கு, அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களில் சிலரை (அழித்து) சிலரை பின்னர் கொண்டு வந்தோம். அவர்களை (மக்களுக்கு) படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்டோம். நம்பிக்கை கொள்ளாத மக்கள் தொலைந்து போகட்டும்.
Tamil Translation - Omar Sharifபிறகு, நாம் நமது தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒரு சமுதாயத்திற்கு, அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களில் சிலரை தொடர்ந்து சிலரை அழித்தோம். இன்னும், அவர்க(ளின் செய்திக)ளை (பிற மக்களுக்கு) படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்டோம். ஆக, நம்பிக்கை கொள்ளாத மக்கள் அழிந்து போவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. பின்னரும் நம் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒரு வகுப்பாரிடம் அவர்களுடைய தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70