وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ وَأَتْرَفْنَٰهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருடைய மக்களில் நிராகரித்து மறுமையின் சந்திப்பை பொய்யாக்கிய தலைவர்கள் கூறினர். - அவர்களுக்கு நாம் உலக வாழ்வில் செல்வத்தை வழங்கியிருந்தோம். - இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறு இல்லை. நீங்கள் சாப்பிடுவதிலிருந்து அவர் சாப்பிடுகிறார் இன்னும் நீங்கள் குடிப்பதிலிருந்து அவர் குடிக்கிறார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவருடைய மக்களில் நிராகரித்துக் கொண்டிருந்த, இன்னும் மறுமையின் சந்திப்பை பொய்யாக்கி கொண்டிருந்த பிரமுகர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அதிக வசதிகளை கொடுத்திருந்தோம். அவர்கள் கூறினார்கள்: “உங்களைப் போன்ற மனிதரே தவிர இவர் இல்லை. நீங்கள் சாப்பிடுவதிலிருந்து அவர் சாப்பிடுகிறார். இன்னும், நீங்கள் குடிப்பதிலிருந்து அவர் குடிக்கிறார்.”
Tamil Translation - Abdulhamid Baqawi33. (ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி (‘ஹூது' நபியை சுட்டிக் காண்பித்து) ‘‘ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனே தவிர வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.