caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:32

فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ أَفَلَا تَتَّقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் ஒரு தூதரை அவர்களில் இருந்தே நாம் அனுப்பினோம். (அவர் கூறினார்) அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி வணங்கத் தகுதியான (வேறு) கடவுள் யாரும் உங்களுக்கு இல்லை. (அவனது தண்டனையை) நீங்கள் அஞ்ச வேண்டாமா?
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களில் இருந்தே ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம். (அவர் கூறினார்:) அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. ஆக, (அவனது தண்டனையை) நீங்கள் அஞ்ச வேண்டாமா?
Tamil Translation - Abdulhamid Baqawi32. அவர்களில் உள்ள (‘ஹூது' என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம் தூதராக நாம் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' (என்று கூறினார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70