فَأَنشَأْنَا لَكُم بِهِۦ جَنَّٰتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَٰبٍ لَّكُمْ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபேரீட்சை மரங்கள் இன்னும் திராட்சை செடிகளினால் உருவான (பல) தோட்டங்களை அதன் மூலம் உங்களுக்காக நாம் உருவாக்கினோம். உங்களுக்கு அதில் அதிகமான பழங்களும் உண்டு. அவற்றிலிருந்து (-அந்த கனிவர்க்கங்களிலிருந்து உணவாகவும்) நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, பேரீட்சை மரங்கள்; இன்னும், திராட்சை செடிகளினால் உருவான (பல) தோட்டங்களை அதன் மூலம் உங்களுக்காக நாம் உருவாக்கினோம். உங்களுக்கு அதில் (இன்னும் பலவகையான) அதிகமான பழங்களும் உண்டு. இன்னும், அவற்றிலிருந்து (-அந்த கனிவர்க்கங்களிலிருந்து உணவாகவும்) நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய பல கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள்.