وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَأَسْكَنَّٰهُ فِى ٱلْأَرْضِ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍۭ بِهِۦ لَقَٰدِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானத்திலிருந்து மழையை ஓர் அளவின் படி நாம் இறக்கினோம். அதை பூமியில் தங்க வைத்தோம். நிச்சயமாக நாம் அதை போக்கி விடுவதற்கு ஆற்றலுடையவர்கள்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானத்திலிருந்து மழையை (குறிப்பிட்ட) ஓர் அளவிற்கு நாம் இறக்கினோம். ஆக, அதை பூமியில் தங்க வைத்தோம். (நாம் நாடினால்) நிச்சயமாக நாம் அதை (பூமியிலிருந்து) போக்கி விடுவதற்கு ஆற்றலுடையவர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.