caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 109

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:109

إِنَّهُۥ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِى يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக என் அடியார்களில் ஒரு கூட்டம் “எங்கள் இறைவா! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, எங்களை மன்னித்து விடு, எங்கள் மீது கருணை புரி, இன்னும் நீ கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக விஷயமாவது, என் அடியார்களில் ஒரு கூட்டம், “எங்கள் இறைவா! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, எங்களை மன்னித்து விடு! இன்னும், எங்கள் மீது கருணை புரி! நீயோ கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi109. நிச்சயமாக நம் அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70