caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 44

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:44

وَأَصْحَٰبُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَىٰ فَأَمْلَيْتُ لِلْكَٰفِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை) பொய்ப்பித்தனர். மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆக, (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலத்திற்கு) பிறகு, (தண்டனையைக் கொண்டு) நான் அவர்களைப் பிடித்தேன். ஆகவே, (நான் அவர்களுக்கு கொடுத்த) எனது மறுப்பு (-தண்டனை) எப்படி இருந்தது!
Tamil Translation - Omar Sharifஇன்னும், மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை பொய்ப்பித்தனர்). மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆக, (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலத்திற்கு) பிறகு, (தண்டனையைக் கொண்டு) நான் அவர்களைப் பிடித்தேன். ஆகவே, (நான் அவர்களுக்கு கொடுத்த) எனது மறுப்பு (-தண்டனை) எப்படி இருந்தது!
Tamil Translation - Abdulhamid Baqawi44. (அவ்வாறே) மத்யன்வாசிகளும் (தங்கள் நபியைப் பொய்யாக்கினர்). (இவ்வாறே) மூஸாவும் (தன் மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆகவே, நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நான் சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். என் வேதனை எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனித்தீரா)?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70