إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلْمَجُوسَ وَٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ إِنَّ ٱللَّهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள், யூதர்கள், மஜூஸிகள் இன்னும் இணைவைத்தவர்கள் இவர்களுக்கு (அனைவருக்கும்) மத்தியில் மறுமைநாளில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இவர்களின் செயல்கள்) எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன் ஆவான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல).
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள், யூதர்கள், மஜூஸிகள் இன்னும், இணைவைத்தவர்கள் (ஆகிய) இவர்களுக்கு மத்தியில் மறுமைநாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இவர்களின் செயல்கள்) எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன் ஆவான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல).
Tamil Translation - Abdulhamid Baqawi17. நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணைவைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தான் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கிறார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்(த்துக்கொண்டே இரு)க்கிறான்.