إِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمْ لَهَا وَٰرِدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவையும் நரகத்தில் எறியப்படுவீர்கள். (அதன் விறகும் எரிபொருளும் நீங்களும் நீங்கள் வணங்குகின்ற கடவுள்களும்தான்.) நீங்கள் அதில் நுழைவீர்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவையும் நரகத்தில் வீசி எறியப்படும் பொருளாவீர்கள். (இறைவனுக்கு மாறுசெய்த) நீங்கள் (எல்லோரும்) அதில் நுழைவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi98. (அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவையும் நரகத்தின் எரிகட்டையாகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டியவர்கள்தான்'' (என்று கூறப்படும்).