وَٱقْتَرَبَ ٱلْوَعْدُ ٱلْحَقُّ فَإِذَا هِىَ شَٰخِصَةٌ أَبْصَٰرُ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَٰوَيْلَنَا قَدْ كُنَّا فِى غَفْلَةٍ مِّنْ هَٰذَا بَلْ كُنَّا ظَٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉண்மையான வாக்கு சமீபமாகிவிடும். அப்போது நிராகரித்தவர்களின் பார்வைகள் கூர்மையாகிவிடும். “எங்கள் நாசமே! இதைவிட்டு அலட்சியத்தில் திட்டமாக நாங்கள் இருந்து விட்டோம். மாறாக, நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” (என்று நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், (மறுமை நிகழும் என) உண்மையான வாக்கு சமீபமாகிவிடும். அப்போது, நிராகரித்தவர்களின் பார்வைகள் கூர்மையாக (உற்று நோக்கிய வண்ணமாக) இருக்கும். “எங்கள் நாசமே! திட்டமாக நாங்கள் இதை (புறக்கணித்து) விட்டு அலட்சியத்தில் இருந்தோம். அது மட்டுமல்ல, நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” (என்று அந்த நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi97. (உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. (அது வரும் சமயத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். ‘‘எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!'' (என்றும் அவர்கள் புலம்புவார்கள்).