فَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவர்களில்) யார் தான் நம்பிக்கையாளராக இருந்து, நற்காரியங்களை (-உண்மையான வணக்க வழிபாடுகளை) செய்வாரோ அவருடைய (நல்ல) முயற்சி (-செயலை) மறுக்கப்படாது. (அதற்கு நற்கூலி உண்டு.) நிச்சயமாக நாம் அதை பதிவு செய்(து பாதுகாக்)கிறோம்.
Tamil Translation - Omar Sharifஆக, யார் - அவரோ நம்பிக்கையாளராக இருந்து, - நற்காரியங்களை செய்வாரோ அவருடைய (நல்ல) முயற்சிக்கு மறுப்பு இல்லை. (அவருக்கு கண்டிப்பாக நற்கூலி உண்டு.) இன்னும், நிச்சயமாக நாம் அதை பதிவு செய்(து பாதுகாத்து வரு)கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi94. ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவற்றைப் பதிவு செய்து வருகிறோம்.