وَٱلَّتِىٓ أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلْنَٰهَا وَٱبْنَهَآ ءَايَةً لِّلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் தனது மறைவிடத்தை பாதுகாத்துக் கொண்டவளையும் (-மர்யமையும்) நினைவு கூர்வீராக! நமது (-நாம் படைத்த) உயிரிலிருந்து அவளில் (-அவளுடைய மேலாடையின் முன்பக்க வழியில்) நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் அகிலத்தார்களுக்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், தனது மறைவிடத்தை பாதுகாத்தவளை (-மர்யமை) நினைவு கூர்வீராக! (நாம் படைத்த) நமது உயிர்களிலிருந்து ஓர் உயிரை அவளில் (-அவளுடைய மேலாடையின் முன்பக்க வழியில்) நாம் ஊதினோம். இன்னும், அவளையும் அவளுடைய மகனையும் அகிலத்தார்களுக்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi91. தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் அவளுடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.