فَٱسْتَجَبْنَا لَهُۥ وَوَهَبْنَا لَهُۥ يَحْيَىٰ وَأَصْلَحْنَا لَهُۥ زَوْجَهُۥٓ إِنَّهُمْ كَانُوا۟ يُسَٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا۟ لَنَا خَٰشِعِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருக்கு நாம் பதிலளித்தோம். அவருக்கு யஹ்யாவை வழங்கினோம். அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் நன்மைகளில் விரைகின்றவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைக்கின்றவர்களாக (-வணங்குகின்றவர்களாக) இருந்தனர். இன்னும் அவர்கள் நம்மிடம் பணிவுள்ளவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi90. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.