caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 74

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:74

وَلُوطًا ءَاتَيْنَٰهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَٰهُ مِنَ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَت تَّعْمَلُ ٱلْخَبَٰٓئِثَ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمَ سَوْءٍ فَٰسِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் லூத்தை நினைவு கூர்வீராக! (மக்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கின்ற ஆற்றலையும் கல்வி ஞானத்தையும் நாம் அவருக்கு கொடுத்தோம். அசிங்கங்களை செய்துகொண்டு இருந்த ஊரிலிருந்து நாம் அவரை பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக, பாவிகளாக இருந்தார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், லூத்தை நினைவு கூர்வீராக! (மக்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கின்ற சட்ட ஞானத்தையும் (மார்க்க) கல்வியையும் நாம் அவருக்கு கொடுத்தோம். இன்னும், அசிங்கமான செயல்களை செய்துகொண்டிருந்த ஊரிலிருந்து நாம் அவரை பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக, பாவிகளாக இருந்தார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi74. லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களில் இருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70