وَجَعَلْنَٰهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَآ إِلَيْهِمْ فِعْلَ ٱلْخَيْرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِ وَكَانُوا۟ لَنَا عَٰبِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமது கட்டளையின்படி நேர்வழி காட்டுகின்ற தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். நன்மைகளை செய்வதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும், ஸகாத்தை கொடுப்பதற்கும் நாம் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். அவர்கள் நம்மை வணங்குபவர்களாக இருந்தார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நமது கட்டளையின்படி நேர்வழிகாட்டுகின்ற தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். இன்னும், நன்மைகளை செய்யும்படியும், தொழுகையை நிலை நிறுத்தும்படியும், ஸகாத்தை கொடுக்கும்படியும் நாம் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். இன்னும், அவர்கள் நம்மை வணங்குபவர்களாக இருந்தார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi73. மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ‘ஜகாத்' கொடுத்து வருமாறும் அவர்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள்.