قَالَ بَل رَّبُّكُمْ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ٱلَّذِى فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: மாறாக, வானங்கள் இன்னும் பூமியின் இறைவன்தான் உங்களுக்கும் இறைவன் ஆவான். அவன்தான் அவற்றைப் படைத்தான். இதற்கு சாட்சி கூறுபவர்களில் நானும் ஒருவன்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “மாறாக, வானங்கள், இன்னும், பூமியின் இறைவன்தான் உங்கள் இறைவன் ஆவான். (இந்த சிலைகளில் எதுவும் அல்ல.) அவன்தான் அவற்றைப் படைத்தான். இன்னும், நான் இதற்கு சாட்சி கூறுபவர்களில் ஒருவன் ஆவேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. அதற்கவர் ‘‘(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன், வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன்தான். (இந்த சிலைகளல்ல) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்.