caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 77

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:77

وَلَقَدْ أَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِى فَٱضْرِبْ لَهُمْ طَرِيقًا فِى ٱلْبَحْرِ يَبَسًا لَّا تَخَٰفُ دَرَكًا وَلَا تَخْشَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவிற்கு திட்டவட்டமாக நாம் வஹ்யி அறிவித்தோம்: என் அடியார்(களான இஸ்ரவேலர்)களை இரவில் அழைத்துச் செல்வீராக! அவர்களுக்காக கடலில் காய்ந்த ஒரு பாதையை ஏற்படுத்துவீராக! (ஃபிர்அவ்னால் நீங்கள்) பிடிக்கப்படுவதை(யும்) நீர் பயப்பட மாட்டீர்; (கடலில் நீங்கள் மூழ்கிவிடுவதையும்) அஞ்சமாட்டீர்.
Tamil Translation - Omar Sharifமூஸாவிற்கு திட்டவட்டமாக நாம் வஹ்யி அறிவித்தோம்: அதாவது, “என் அடியார்(களான இஸ்ரவேலர்)களை இரவில் அழைத்துச் செல்வீராக! ஆக, அவர்களுக்காக கடலில் (ஈரமற்ற) காய்ந்த பாதையை ஏற்படுத்துவீராக! (ஃபிர்அவ்னால் நீங்கள்) பிடிக்கப்படுவதை(யும்) நீர் பயப்பட மாட்டீர்; (கடலில் நீங்கள் மூழ்கிவிடுவதையும்) அஞ்சமாட்டீர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi77. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். ‘நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுவீராக. (வழியில் குறுக்கிடும்) கடலில் (உமது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக. (உம்மை எதிரிகள்) அடைந்து விடுவார்கள் என்று நீர் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உமது மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீர் அஞ்சாதீர்'' (என்றும் அறிவித்தோம்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70