caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 58

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:58

فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهِۦ فَٱجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهُۥ نَحْنُ وَلَآ أَنتَ مَكَانًا سُوًى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாமும் அதுபோன்ற ஒரு சூனியத்தை உம்மிடம் கொண்டு வருவோம். ஆகவே, எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் இடைப்பட்ட ஒரு சமமான இடத்தில் (நாம் ஒன்று சேர) குறிப்பிட்ட நேரத்தை ஏற்படுத்து. நாமும் அதற்கு மாறுசெய்ய மாட்டோம். நீயும் அதற்கு மாறுசெய்யக் கூடாது.
Tamil Translation - Omar Sharifஆக, நிச்சயமாக நாமும் அதுபோன்ற ஒரு சூனியத்தை உம்மிடம் கொண்டு வருவோம். ஆகவே, எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் ஒரு சமமான இடத்தில் (நாம் ஒன்று சேர) குறிப்பிட்ட ஒரு நேரத்தை முடிவு செய்வீராக! நாமும் அதை மீற மாட்டோம். நீயும் அதை மீறக் கூடாது.
Tamil Translation - Abdulhamid Baqawi58. இதைப்போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குச் செய்து காண்பிப்போம். நாங்களோ அல்லது நீரோ தவறிவிடாதவாறு ஒரு சமமான பூமியில் (செய்து காண்பிக்க) எங்களுக்கும் உமக்குமிடையில் ஒரு தவணையைக் குறிப்பிடுவீராக!'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70