caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 53

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:53

ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجْنَا بِهِۦٓ أَزْوَٰجًا مِّن نَّبَاتٍ شَتَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் உங்களுக்கு பூமியை (தொட்டிலாகவும்) விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் (பல) பாதைகளை ஏற்படுத்தினான். இன்னும் வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகைகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.
Tamil Translation - Omar Sharifஅவன் எத்தகையவன் என்றால் உங்களுக்கு பூமியை (தொட்டிலாகவும்) விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் (பல) பாதைகளை (அவற்றில் நீங்கள் சென்றுவருவதற்காக) ஏற்படுத்தினான். இன்னும், வானத்திலிருந்து மழையை இறக்கினான். ஆக, அதன் மூலம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகை(உணவு வகை)களை நாம் உற்பத்தி செய்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (பயணத்திற்கான) வழிகளையும் அதில் உங்களுக்கு ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்.'' (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) ‘‘நாம் இறக்கிவைக்கும் (ஒரே வித) மழை நீரைக்கொண்டு (குணத்திலும், ரசனையிலும் மாறுபட்ட) பல விதமான புற்பூண்டுகளில் (ஆண், பெண்) ஜோடிகளை வெளிப்படுத்துகிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70