caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 126

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:126

قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ ءَايَٰتُنَا فَنَسِيتَهَا وَكَذَٰلِكَ ٱلْيَوْمَ تُنسَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (அல்லாஹ்) கூறுவான்: அவ்வாறுதான் நமது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆனால் நீ அவற்றை மறந்தாய். அவ்வாறே இன்றும் நீ மறக்கப்படுவாய்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) கூறுவான்: “(உனது நிலை) அவ்வாறுதான். (ஏனெனில்,) எனது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆக, நீ அவற்றை (பின்பற்றாது) விட்டுவிட்டாய். அவ்வாறே இன்று நீ (நரகத்தில் கடும் தண்டனையை அனுபவிப்பவனாக) விட்டுவிடப்படுவாய்.”
Tamil Translation - Abdulhamid Baqawi126. அதற்கு (இறைவன்) ‘‘இவ்வாறே (குருடனைப்போன்றே உன் காரியங்கள் இருந்தன) நம்வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்'' என்று கூறுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70