caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 121

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:121

فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْءَٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ ٱلْجَنَّةِ وَعَصَىٰٓ ءَادَمُ رَبَّهُۥ فَغَوَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவ்விருவரும் அதிலிருந்து (அம்மரத்திலிருந்து) சாப்பிட்டனர். ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் மறைவிடங்கள் தெரியவந்தன. சொர்க்கத்தின் இலைகளை அவ்விருவரும் தங்கள் இருவர் மீது கட்டிக் கொள்வதற்கு முற்பட்டனர். ஆதம் தன் இறைவனுக்கு மாறுசெய்தார். (அவனது கட்டளையை மீறினார்.) ஆகவே, வழி தவறிவிட்டார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவ்விருவரும் அ(ந்த மரத்)திலிருந்து சாப்பிட்டனர். ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் மறைவிடங்கள் தெரிய வந்தன. இன்னும், சொர்க்கத்தின் இலைகளை அவ்விருவரும் தங்கள் மீது கட்டி (தங்கள் மறைவிடத்தை மறைத்து)க் கொள்வதற்கு முற்பட்டனர். ஆதம், தன் இறைவனுக்கு மாறுசெய்தார். ஆகவே, அவர் வழி தவறிவிட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi121. ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70