caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 75

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:75

أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا۟ لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்காக அவர்கள் நம்பிக்கை கொள்வதை ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகின்றனர். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்கள் அறிந்தே அதை மாற்றுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஉங்களுக்காக அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகுவதை நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகிறார்கள். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்களோ (தாம் செய்வது பாவம் என்பதை) அறிந்தவர்களாக இருந்த நிலையில் அதை தவறாக மாற்றுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. (நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70