فَقُلْنَا ٱضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَٰلِكَ يُحْىِ ٱللَّهُ ٱلْمَوْتَىٰ وَيُرِيكُمْ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனவே, "அதில் சில (பாகத்)தைக்கொண்டு அவரை அடியுங்கள்." எனக் கூறினோம். அப்படியே, இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஆக, “அதில் சில (பாகத்)தைக்கொண்டு (இறந்த) அவரை அடியுங்கள்” எனக் கூறினோம். இவ்வாறுதான், இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். இன்னும், நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi73. ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதை அறுத்து) ''அதில் ஒரு பாகத்தைக் கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்'' என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வான்ற இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வதற்காக அவன் தன் (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகிறான்.