caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 35

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:35

وَقُلْنَا يَٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசிப்பீராக! இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். இந்த மரத்தை இருவரும் நெருங்காதீர்கள். (நெருங்கினால்) இருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்" எனக் கூறினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நாம் கூறினோம்: “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் தங்கி இருங்கள்! இன்னும் நீங்கள் இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். ஆனால், இந்த மரத்தை நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள். (அப்படி நெருங்கினால்) அநியாயக்காரர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi35. பின்னர், நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) “ஆதமே! நீர் உமது மனைவியுடன் சொர்க்கத்தில் வசித்திருப்பீராக. நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால், இந்த மரத்தை நெருங்காதீர்கள். நெருங்கினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்'' என்று கூறினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70