إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தவர்கள், அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தார்களோ அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi277. எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப் பிடித்து, மார்க்க வரியையும் (ஸகாத்து) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.