caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 175

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:175

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلضَّلَٰلَةَ بِٱلْهُدَىٰ وَٱلْعَذَابَ بِٱلْمَغْفِرَةِ فَمَآ أَصْبَرَهُمْ عَلَى ٱلنَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள்தான் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நரக நெருப்பின் மீது அவர்களைத் துணிவு கொள்ளும்படி செய்தது எது?
Tamil Translation - Omar Sharifஅவர்கள் எத்தகையோர் என்றால் (அல்லாஹ்வின்) நேர்வழிக்குப் பதிலாக (ஷைத்தானின்) வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நரக நெருப்பின் மீது அவர்கள் எவ்வளவு துணிவாக இருக்கிறார்கள்?
Tamil Translation - Abdulhamid Baqawi175. இவர்கள்தான் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவோ?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70