caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 139

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:139

قُلْ أَتُحَآجُّونَنَا فِى ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَآ أَعْمَٰلُنَا وَلَكُمْ أَعْمَٰلُكُمْ وَنَحْنُ لَهُۥ مُخْلِصُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"நீங்கள் அல்லாஹ்வின் விசயத்தில் நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? அவன்(தான்) எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான்! எங்கள் செயல்கள் (அவற்றின் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அவற்றின் பலன்) உங்களுக்கே; நாங்கள் அவனுக்கே வழிபாட்டை கலப்பின்றி செய்பவர்கள்" எனக் கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனோ எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான்! எங்கள் செயல்கள் (உடைய பலன்) எங்களுக்கு கிடைக்கும். இன்னும் உங்கள் செயல்கள் (உடைய பலன்) உங்களுக்கு கிடைக்கும். நாங்கள் வணக்க வழிபாடுகளை (கலப்பின்றி) அவனுக்கு மட்டும் தூய்மையாக செய்வோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi139. ‘‘நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (உடைய பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (உடைய பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே கலப்பற்றதாக ஆக்குவோம்'' என்றும் கூறுவீராக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70