رَبَّنَا وَٱبْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"எங்கள் இறைவா! (என் சந்ததிகளாகிய) அவர்களில் உன் வசனங்களை அவர்களுக்கு ஓதி, வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் ஒரு தூதரை அவர்களிலிருந்து அனுப்பு! நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; மகா ஞானவான்" (என்று பிரார்த்தித்தனர்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், “எங்கள் இறைவா! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பு! அவர் உனது வேத வசனங்களை அவர்களுக்கு ஓதி காண்பிப்பார். இன்னும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்து கொடுப்பார். இன்னும், (தீய குணங்களில் இருந்து) அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; மகா ஞானவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi129. எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன் வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த ஞானங்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன், ஞானமுடையவன்'' (என்று பிரார்த்தித்தனர்).